தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மருத்துவர்கள் அலட்சியத்தால் பச்சிளம் குழந்தை பலி! - இறந்தது

விருதுநகர்: அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களின் அலட்சியத்தால் பிறந்து ஒரு மணி நேரம் ஆன பச்சிளம் குழந்தை இறந்தது என்று உறவினர்கள், பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

born baby died

By

Published : Aug 28, 2019, 10:21 PM IST

விருதுநகர் மாவட்டம் பட்டுத்தெருவைச் சேர்ந்தவர் தன்வித்ராஜா. இவர் தனியார் நிறுவனத்தில் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி காயத்ரி (23) கர்ப்பம் தரித்து தலைப் பிரசவத்திற்காக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இன்று அதிகாலை 4:30 மணிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு தீவிர பிரசவ வலி ஏற்பட்டதால் சுக பிரசவத்திற்காக மருத்துவர்கள் காத்திருக்க வைத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் அந்த பெண் குழந்தை மூச்சுவிட சிரமப்பட்டதால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

குழந்தை இறந்த சோகத்தில் உறவினர்கள்

ஆனால் மருத்துவமனைக்கு கொண்டுவரும் பொழுதே குழந்தை இறந்துவிட்டதாக அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

எனவே இந்த சம்பவத்துக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களின் அலட்சியம்தான் காரணம் என கூறப்படுகிறது. மருத்துவர்களின் அலட்சியம் காரணமாக பச்சிளம் குழந்தையின் இறப்பு அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியது.

அரசு மருத்துவமனையில் உறவினர்கள்

மேலும் இது போன்ற அசம்பாவிதங்கள் இனிவரும் காலங்களில் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்று அனைவரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details