தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பயிரை மேய்ந்த ஆடுகள்.. விஷம் வைத்து கொன்ற உரிமையாளர் - எஸ்டி

விருதுநகா்: சாத்தூா் அருகே கீழத்தாயில்பட்டியில் இருக்கும் தோட்டத்தில் பயிரிடப்பட்டு இருந்த பயிர்களை சேதப்படுத்திய 30க்கும் மேற்பட்ட ஆடுகளுக்கு விஷம் வைத்து கொன்ற பழனிசெல்வம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்

இறந்து கிடக்கும் ஆடுகள்

By

Published : Jul 23, 2019, 7:27 PM IST

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே உள்ள கீழத்தாயில்பட்டியைச் சேர்ந்த சூரியராஜ், கனகராஜ், கருப்பசாமி ஆகிய மூன்று பேரும் சோ்ந்து கூட்டாக ஆடு வளர்க்கும் தொழில் செய்துவருகின்றனா். இவர்களிடம் சுமார் 100க்கும் மேற்பட்ட ஆடுகள் உள்ளன.

இந்த மூன்று பேரும் நேற்று வழக்கம்போல் ஆடு மேய்க்க சென்று வீடு திரும்பி கொண்டிருந்தபோது தீடிரென்று ஆடுகள் அனைத்தும் ஆங்காங்கே விழ தொடங்கின. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆட்டின் உரிமையாளர்கள் மூன்று பேரும் ஆட்டின் அருகே சென்று பார்த்தபோது, ஆடுகள் அனைத்தும் வாயில் நுரை தள்ளி இறந்தது தெரியவந்தது.

இறந்து கிடக்கும் ஆடுகள்

இதனை அடுத்து ஆட்டின் உரிமையாளா்கள் மூன்று பேரும் வெம்பக்கோட்டை காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனா். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த அரசு கால்நடை மருத்துவா்கள் குழு ஆடுகளை பரிசோதனை செய்து, மேலும் ஆடுகள் பாதிக்கப்படாமல் இருக்க ஆடுகளுக்கு தடுப்பு ஊசி போட்டனா்.

பின்னா் ஆட்டின் உரிமையாளா்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆடுகளை விஷம் வைத்து கொன்றதாக பழனிசெல்வம்(50) என்பவரை காவல் துறையினர் கைது செய்தனா். அவரிடம் நடத்திய விசாரணையில் தன்னுடைய தோட்டத்தில் பயிரிடப்பட்டு இருந்த பயிர்களை ஆடுகள் சேதப்படுத்தியதால்தான் ஆடுகளுக்கு விஷம் வைத்து கொன்றதாக தெரிவித்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், சுமார் 100க்கும் மேற்பட்ட காவல் துறையினர் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details