ராஜபாளையத்தை அடுத்த தளவாய்புரம் பகுதியில் தேர்தல் அலுவலர் பொன்னுலட்சுமி தலைமையில் சார்பு ஆய்வாளர் மனோகரன், காவலர்கள் முருகன், சேது, காளிஸ்வரி ஆகியோர் தீவிர சோதனையில் சோதனை பணிகளில் ஈடுபட்டனர்.
இந்தச் சோதனையின்போது, காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரிடம் 4 லட்சத்து 84 ஆயிரத்து 190 ரூபாய் பணம் இருந்தது கண்டறியப்பட்டது. உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாததால் அந்தத் தொகையை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.