விருதுநகர்: சிவகாசி அருகே உள்ள களத்தூர் கிராமத்தில் வழிவிடுமுருகன் என்பவருக்கு சொந்தமான ஆர்கேவிஎம் பட்டாசு தொழிற்சாலை இயங்கி வந்தது. இந்நிலையில் தொழிற்சாலையில் நேற்று (ஜன.1) காலை வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 7-க்கும் மேற்பட்ட அறைகள் வெடித்து சிதறி தரைமட்டமாகின.
வெடி விபத்தில் மேலாளர் குமார், வீரகுமார் (எ) முருகேசன், பெரியசாமி, செல்வம் ஆகிய 4 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் தொழிற்சாலை ஊழியர்களான கோபாலகிருஷ்ணன், முனியாண்டி, காளியப்பன், அழகர்சாமி, முருகேசன் உள்ளிட்ட 8 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
வெடிவிபத்து ஏற்பட்ட பட்டாசு தொழிற்சாலையை பார்வையிடும் அலுவலர்கள் தொடர்பான காணொலி இதில் நால்வர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வெடி விபத்து குறித்து நத்தம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தலைமறைவான பட்டாசு ஆலை உரிமையாளர் மீது 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவை மீறி தடை செய்யப்பட்ட வேதி பொருளான பேரியம் நைட்ரேட்டை(பச்சை உப்பு) பயன்படுத்தி ஈடுபட்டு விபத்து ஏற்படுத்தியதாக, பட்டாசு ஆலை உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:சென்னையில் புதிய காவல் ஆணையரகங்களை திறந்துவைத்த முதலமைச்சர்