தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கனமழை: சதுரகிரி மலைப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கு! - சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்

விருதுநகர்: மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக சதுரகிரியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Floods in sathuragiri hills due to heavy rain flow in western ghats
சதுரகிரி மலைப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கு

By

Published : Sep 7, 2020, 2:42 PM IST

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக சதுரகிரி அருகே ஓடைகள், பாறைகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

தமிழ்நாட்டின் வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச் சலனம் காரணமாக விருதுநகர் உள்பட மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழைபெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்யும் எனவும் தெரிவித்தது.

இதையடுத்து கடந்த சில நாள்களாக ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்லும் வழியில் இருக்கும் மாங்கனி ஓடை, சங்கிலிப் பாறை, வழுக்குப் பாறை உள்ளிட்ட ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்தது. இதைத்தொடர்ந்து தொடர் மழையின் காரணமாக தற்போது வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கனமழையால் சதுரகிரி மலைப்பகுதியில் வெள்ளப்பெருக்கு

அமாவாசை, பௌர்ணமி நாள்களைத் தவிர பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல அனுமதி இல்லாத காரணத்தால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சினிமா பட பாணியில் நடந்த சேஷிங்: மணல் திருடிய ஜேசிபி ஓட்டுநர் கைது

ABOUT THE AUTHOR

...view details