தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 1, 2019, 8:16 AM IST

ETV Bharat / state

ஐந்தாயிரம் கோழிக்குஞ்சுகள் பரிதாபமாக உயிரிழப்பு!

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கோழிப்பண்ணைக்குள் வெள்ள நீர் புகுந்ததால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட கோழிக்குஞ்சுகள் உயிரிழந்தன.

five thousand chicks died by flooded

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், அதன் சுற்றுவட்டாரங்களான கூமாப்பட்டி , வத்திராயிருப்பு, மகாராஜாபுரம், தம்பிபட்டி, பிளவக்கல், தாணிப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக அணைகள், கண்மாய்கள், ஓடைகள் என அனைத்து நீர்நிலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

வெள்ளத்தால் பரிதாபமாக உயிரிழந்த கோழிக்குஞ்சுகள்

இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நெடுங்குளம் பகுதியில் மதன்குமார் என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணைக்குள்ளும் வெள்ள நீர் புகுந்தது. அதிக வெள்ளத்தால் பொத்தாள் ஓடையின் கரை உடைந்து கோழிப்பண்ணைக்குள் மழைநீர் புகுந்தது தெரியவந்தது. வெள்ள நீர் புகுந்ததால் சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட கோழிக்குஞ்சுகள் உயிரிழந்தன. மேலும் ஏராளமான கோழிக்குஞ்சுகள் ஓடையில் அடித்துச் செல்லப்பட்டன. ரூபாய் ஐந்து லட்சத்துக்கும் மேலாக நஷ்டம் ஏற்பட்டுள்ளதால், தமிழ்நாடு அரசு நிவராணத்தொகை வழங்க வேண்டும் என மதன்குமார் கோரிக்கைவிடுத்துள்ளார்.

இதையும் படிங்க: நரியை வேட்டையாடிய கோழிகள்

ABOUT THE AUTHOR

...view details