தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விருதுநகர் அருகே வெடிவிபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலை உரிமம் ரத்து! - விருதுநகர் அண்மைச் செய்திகள்

விருதுநகர் : சதானந்தபுரத்தில் வெடி விபத்து நடைபெற்ற பட்டாசு ஆலையின் உரிமத்தை வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை அலுவலர்கள் ரத்து செய்தனர்.

விருதுநகர் அருகே வெடிவிபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலை உரிமம் ரத்து
விருதுநகர் அருகே வெடிவிபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலை உரிமம் ரத்து

By

Published : Apr 22, 2021, 1:36 AM IST

விருதுநகர் மாவட்டம் சதானந்தபுரத்தில் கடந்த 15ஆம் தேதி தேசிங்கு ராஜா என்பவருக்கு சொந்தமான பத்திரகாளி பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் நால்வர் பலத்த தீக்காயமடைந்தனர். இவர்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு இராசாசி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். இதில் சிவகாசி ஆணையூர் பகுதியைச் சேர்ந்த ஆதிலட்சுமி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இந்நிலையில் வெடி விபத்து நடைபெற்ற ஆலையில் ஆய்வு மேற்கொள்ள வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அலுவலர் சுந்தரேசன் உத்தரவிட்டார்.

வெடிபொருள் கட்டுப்பாட்டு அலுவலர் நிதின் கோயல் தலைமையிலான குழுவினர் நடத்திய ஆய்வில் விதிமீறல் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக ஆலையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டது. இது தொடர்பான அறிக்கை நாக்பூர் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதையும் படிங்க : ஸ்வாப் இல்லை, ரத்தப் பரிசோதனை இல்லை... ஆனால் 2 நிமிடங்களில் துல்லிய கரோனா பரிசோதனை!

ABOUT THE AUTHOR

...view details