தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விருதுநகர் பட்டாசு மத்தாப்பு தீக்குச்சி ஆலை தீ விபத்து : 3 பேர் உயிரிழப்பு! - தீ விபத்து

விருதுநகர்: குருமூர்த்தி நாயக்கன்பட்டியில் பட்டாசு மத்தாப்பு தீக்குச்சி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

விருதுநகரில் பட்டாசு மத்தாப்பு தீக்குச்சி ஆலையில் தீவிபத்து :4 பேர் படுகாயம்!
விருதுநகரில் பட்டாசு மத்தாப்பு தீக்குச்சி ஆலையில் தீவிபத்து :4 பேர் படுகாயம்!

By

Published : Mar 14, 2021, 8:55 AM IST

விருதுநகர் அருகே குருமூர்த்தி நாயக்கன்பட்டியில் விசாக் (28) என்வருக்கு சொந்தமான துர்கா கலர் மேச் பேக்டரி உள்ளது. இதில் நேற்று (மார்ச் 13) மாலை மத்தாப்பு காயவைக்கும் அறையில் உராய்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் திடீரென பற்றிய தீயில் அந்த அறையில் வேலை பார்த்து வந்த தொழிலாளர்கள் வீராச்சாமி, புதுராஜன், நடராஜன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். 80 விழுக்காடு தீக்காயத்துடன் அவர்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த புதுராஜன், நடராஜன், வீராச்சாமி ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

விருதுநகர் பட்டாசு மத்தாப்பு தீக்குச்சி ஆலை தீ விபத்து :4 பேர் படுகாயம்!

மேலும், இந்த விபத்தில் பஞ்சவர்ணம் என்ற தொழிலாளிக்கு 30 விழுக்காடு காயம் ஏற்பட்டது. விபத்தை அறிந்த விருதுநகர் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு துறையினர் தீயை கட்டுப்படுத்தினர். ஆமத்தூர் காவல் துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க...காங்கிரஸ் தொகுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details