விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவருக்கு சொந்தமாக துலக்கன்குறிச்சியில் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் சுமார் 70க்கும் மேற்பட்ட அறைகளும் 300க்கும் மேற்பட்ட ஊழியர்களும் பணி செய்து வருகின்றனர்.
பட்டாசு ஆலையில் வெடி விபத்து இருவர் பலி - பட்டாசு ஆலை
விருதுநகர்: தனியார் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் நிகழ்விடத்திலேயே இரண்டு பேர் உடல் சிதறி பலியாகினார்.
இந்நிலையில் இன்று பட்டாசு ஆலையில் காலையில் வழக்கம் போல் ஊழியர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அணுகுண்டு தயாரிக்க தேவையான மூலப்பொருட்களை தயார் செய்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மருந்தில் ஏற்பட்ட உராய்வு காரணமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அங்கு பணியில் இருந்த சுந்தர்ராஜ், முருகேசன் நிகழ்விடத்திலேயே உடல் சிதறி பலியானாகின. தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் வேறு அறைகளுக்கு தீ பரவாமல் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.