விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு விவிவி நகரில் வசித்து வருபவர் கணேசன். இவர் சம்சா வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இவருடைய மூன்றாவது மகள் ஆனந்திக்கு (30), ரமேஷ் என்பவருடன் திருமணமாகி ஏழு மற்றும் இரண்டு வயதில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.ஆனந்தி நரிக்குடி அருகே மேலகள்ளிக்குளம் என்ற கிராமத்தில் தலையாரியாக பணி செய்து வந்தார்.
ஆனந்தியின் கணவர் ரமேஷ் ஐந்து வருடங்களுக்கு முன் இறந்து விடவே ஆனந்தி தன் மகன்களுடன் மல்லாங்கிணறில் தன் தந்தையின்வீட்டின் அருகே வசித்து வந்தார். இந்நிலையில், ஆனந்திக்கும் கல்குறிச்சியில் தலையாரியாக பணி செய்து வரும் கணபதி என்பவருக்கும் நட்பு ஏற்படவே நாளடைவில் நெருங்கி பழக ஆரம்பித்துள்ளனர். கணபதி ஏற்கனவே திருமணம் ஆனவர்.