விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள நத்தத்துப்பட்டியைச் சேர்ந்தவர் பொன்னு பாண்டியன் (60). இவர் கூலி வேலை செய்துவருகிறார். பொன்னு பாண்டியனுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவரது மகன் பெருமாள் (40) மதுபோதைக்கு அடிமையானவர்.
பெருமாள் நாள்தோறும் பணி முடிந்து வீட்டிற்கு வரும்போது மது அருந்திவிட்டு வந்து தகராறில் ஈடுபடுவதும், மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி வந்து வீட்டில் வைத்து குடித்து குடும்பத்தில் உள்ளவர்களிடம் தகராறு செய்வதுமாக இருந்துள்ளார்.
ஊரடங்கு காரணமாக 50 நாள்களாக மதுக்கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில் மீண்டும் திறந்ததால் மொத்தமாக மதுபாட்டில்களை வாங்கிவந்து வீட்டில் வைத்து மது அருந்திவிட்டு குடும்பத்தில் உள்ளவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால், பொன்னு பாண்டியனுக்கும் பெருமாளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை முற்றியுள்ளது.