தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீட் தேர்வில் தேர்ச்சியடைந்தும் மருத்துவப் படிப்பிற்கு இடமில்லை: மாற்றுத்திறனாளி இளைஞர்! - காமராஜர் நினைவு இல்லம்

விருதுநகர்: நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் கடந்த இரண்டு ஆண்டுகளாக மருத்துவப் படிப்பிற்கு இடம் கிடைக்காத மாற்றுத்திறனாளி இளைஞர், காமராஜர் நினைவு இல்லம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

மாற்றுத்திறனாளி இளைஞர்

By

Published : Jul 7, 2019, 1:27 PM IST

மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்தவர் அருண்குமார்(27). மாற்றுத்திறனாளியான இவர், 2008 ம் ஆண்டு நடந்த விபத்தில் வலது கையில் மூன்று வீரல்களை இழந்தவர். 50 சதவீதம் மாற்றுத்திறன் கொண்டவர் என சான்றிதழ் பெற்றுள்ளார். இந்நிலையில் 2013ம் ஆண்டு லேப் டெக்னீசன் படிப்பு முடிந்த இவர், கடந்த 2018ல் நடந்த நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்தும் தன் கையில் உள்ள குறைபாடு காரணமாக மருத்துவ அறுவை சிகிச்சை கருவிகளை பயன்படுத்த முடியாது எனக் கூறி மருத்துவ படிப்பு பயில உரிமை மறுக்கப்படுவதாக தெரிவித்தார்.

தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளி அருண்

இந்நிலையில், இதை கண்டித்து காமராஜர் நினைவு இல்லம் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர் கூறுகையில்,

சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயில தகுதியானவர் என அனுமதி பெற்றும், மாவட்ட மருத்துவக் குழுவில் நிராகரிக்கப்பட்டேன். அதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்தேன். அதன்பின், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டு ஜிஆர் சுவாமிநாதன் தலைமையில் வழங்கப்பட்ட தீர்ப்பில் மூன்றாவது முறையாக மருத்துவக் குழுவின் மூலம் அனுமதி பெறப்பட்டும் கடைசியாக வந்த மருத்துவப் பட்டியல் வரை என்னுடைய பெயர் இடம்பெறவில்லை என்றார்.

ABOUT THE AUTHOR

...view details