தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடன் தொல்லையால் குடும்பமே தற்கொலை! - விருதுநகரில் சோகம் - family suicide

விருதுநகர்: கடன் பிரச்னையால் விஷம் குடித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேருமே உயிரிழந்தனர்.

விருதுநகர்

By

Published : Nov 11, 2019, 10:19 AM IST

விருதுநகர் அருகே பெரியவள்ளி குளத்தில் கடந்த 25 ஆண்டுகளாக மல்லி ஆலை வைத்து நடத்திவருபவர் இன்பமூர்த்தி. மல்லி வியாபாரத்தில் கடன் அதிகமாகி பண பிரச்னை ஏற்பட்டதால் இன்பமூர்த்தி (60), அவரது மனைவி திலகவதி (55), மகன் கண்ணன் (38) ஆகிய மூன்று பேரும் நேற்று இரவு பெரியவள்ளி குளத்தில் உள்ள மல்லி ஆலையில் எலி மருந்து அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

இதில் இன்பமூர்த்தி, கண்ணன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இன்பமூர்த்தியின் மனைவி திலகவதி மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து சூலக்கரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details