தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து; ஒருவர் உயிரிழப்பு! - Panayadipatti fire accident

Sattur Panayadipatti fire factory accident: சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி மருந்து தயாரிக்கும் பணியின்போது ஏற்பட்ட விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து; ஒருவர் உயிரிழப்பு!
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து; ஒருவர் உயிரிழப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 15, 2023, 10:58 AM IST

விருதுநகர்: சாத்தூர் அருகே பனையடிப்பட்டி கிராமத்தில் ஜெயபால் என்பவருக்குச் சொந்தமான தனியார் பட்டாசு ஆலை வெடிபொருள், கண்காணிப்புத் துறை உரிமத்துடன் செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் 30க்கும் மேற்பட்ட பட்டாசு தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று (டிச.15) வழக்கம்போல் காலையில் பட்டாசு தயார் செய்வதற்கு தேவையான மூலப்பொருட்கள் தயாரிக்கும்போது ஏற்பட்ட உராய்வின் காரணமாக, திடீரென வெடி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வெடி விபத்தால் பட்டாசு ஆலையில் ஒரு அறை முழுவதும் வெடித்து சிதறி தரைமட்டமாகி உள்ளது.

இந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் கண்டியாபுரத்தைச் சேர்ந்த தொழிலாளி சண்முகராஜ் (36), சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெம்பக்கோட்டை, சாத்தூர் பகுதியைச் சேர்ந்த தீயணைப்புத் துறையினர், தீயை அனைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும், சம்பவ இடத்தில் உயிரிழந்த சண்முகராஜ் உடலை மீட்டு, சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த பட்டாசு ஆலை வெடி விபத்து குறித்து ஏழாயிரம்பண்னை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:தாய், மகன் மீது ஆசிட் ஊற்றியவருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை!

ABOUT THE AUTHOR

...view details