விருதுநகரில் பழைய பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட இட நெருக்கடி மற்றும் அடிப்படை வசதிகள் பற்றாக்குறை காரணமாக புதிய பேருந்து நிலையம் கட்ட 1989ஆம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்டு, 1992ஆம் ஆண்டு ரூ. 55 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது.
இந்தப் புதிய பேருந்து நிலையம் செயல்பாட்டில் இல்லாமல் பயன்பாடின்றி சிதிலமடைந்த நிலையில் இருந்தது. இதுகுறித்து நமது ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகம், தொடர்ந்து பொது மக்களிடம் கருத்து கேட்டு செய்தி வெளியிட்டு வந்தது.
அதன் எதிரொலியாக தற்போது புதிய பேருந்து நிலையத்தை மீண்டும் மறுசீரமைப்பு செய்து பயன்பாட்டிற்குக் கொண்டுவர மாவட்ட நிர்வாகம் முழு வீச்சில் இறங்கியுள்ளது.
ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: சீரமைக்கப்படும் விருதுநகர் புதிய பேருந்து நிலையம் கூடிய விரைவில் புதிய பேருந்து நிலையம் முழுமையாக மறு சீரமைப்பு செய்யப்பட்டு பயன்பாட்டிற்கு வரவுள்ளது. மேலும், புதிய பேருந்து நிலையம் சீரமைக்கப்படும் போது, மின்சார வசதி, கழிப்பிட வசதி போன்றவற்றைக் கூடுதலாக ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க: 'பாவம்ப்பா... இந்த காக்கா... குருவிகள் எல்லாம்' - பொம்மலாட்டத்தில் அசத்திய மழலைகள்