தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இன்னும் இரண்டு மாதத்தில் எடப்பாடி பழனிசாமி நிரந்தர பொதுச் செயலாளர் - மாஃபா. பாண்டியராஜன் - Ma foi Pandiyarajan

அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமி, இன்னும் இரண்டு மாதத்தில் நிரந்தர பொதுச் செயலாளராவார் என்று முன்னாள் அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் கூறியுள்ளார்.

இன்னும் இரண்டு மாதத்தில் எடப்பாடி பழனிசாமி நிரந்தர பொதுச் செயலாளர் - மாஃபா.பாண்டியராஜன் பேச்சு
இன்னும் இரண்டு மாதத்தில் எடப்பாடி பழனிசாமி நிரந்தர பொதுச் செயலாளர் - மாஃபா.பாண்டியராஜன் பேச்சு

By

Published : Oct 18, 2022, 7:33 AM IST

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அதிமுகவின் பொன்விழா மற்றும் 51ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். முன்னதாக பொதுக்கூட்ட மேடையில் மாஃபா.பாண்டியராஜன் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

தொடர்ந்து நலிவடைந்த கட்சி நிர்வாகிகளுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. பின்னர் பொதுக்கூட்ட மேடையில் எம்.ஜி.ஆர் பாடலை பாடி பேச்சைத் தொடங்கிய மாஃபா.பாண்டியராஜன், “அதிமுக எல்லா சமுதாயத்தையும் ஒன்றாக பார்க்கக் கூடிய கட்சி. திமுக ஆட்சியில் மீண்டும் மின்வெட்டு அதிகரித்துள்ளது.

மாஃபா.பாண்டியராஜன் பேச்சு

எனவேதான் மின் வெட்டும் திமுகவும் ஒட்டிப் பிறந்தது. திமுக பொதுக்குழுவில் வைத்தே அமைச்சர்களின் செயல்களை பார்த்து என் உடம்பு ஒரு மாதிரி ஆகிவிட்டது என முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகிறார். தமிழ்நாட்டு மக்களை இழிவுப்படுத்தி பேசும் திமுக அமைச்சர்களில் ஒரு அமைச்சரை மானம், ரோஷம் இருந்தால் தூக்கி வெளியே அனுப்ப முடியுமா?

அதிமுகவில் கடைக்கோடி தொண்டனும் கூட பெரிய பதவிக்கு வர முடியும். ஆனால் திமுகவில் ஸ்டாலின் ஒரு பக்கம். உதயநிதி, கனிமொழி என ஒரு பக்கம். மற்றொரு பக்கம் தனது சொந்தகாரர் ராஜா என, கட்சியில் திமுக குடும்ப அரசியல்தான் உள்ளது. திமுகவை பொறுத்தவரை கமிஷன், கலெக்சன், கரப்சன். அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்னும் இரண்டு மாதத்தில் நிரந்தர பொதுச் செயலாளராக வருவார்.

திமுகவின் 16 மாத கால ஆட்சியின் மீது மக்களுக்கு வெறுப்பு இருப்பதால்தான், கண்டா வரச்சொல்லுங்க, எடப்பாடி பழனிசாமியை கண்டா வரச்சொலுங்க என பாடும் அளவிற்கு திமுக ஆட்சி உள்ளது. நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வர வாய்ப்புள்ளது” என்றார்.

இதையும் படிங்க:அதிமுகவின் பொன்விழா - தனித்தனியாக கொண்டாடிய ஓபிஎஸ், இபிஎஸ்

ABOUT THE AUTHOR

...view details