விருதுநகர் அருகே உள்ள வடமலைக்குறிஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் தங்கப்பாண்டி. இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த மாதவன் என்பவருக்கும் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தோ்தலில் மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் மீண்டும் இருவருக்கும் கடந்த ஆண்டு மோதல் ஏற்பட்டது. இதில் மாதவன் மீது வழக்குப்பதிவு செய்து ஓராண்டு விருதுநகர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனையடுத்து நேற்று (மே 4) மாலை தங்கப்பாண்டியும் அவரது மணைவி லாவண்யாவும் விருதுநகரில் இருந்து இருசக்கர வாகனத்தில் வடமலைக்குறிஞ்சி சென்றுகொண்டிருந்தனர். அப்போது சின்னமூப்பன்பட்டி அருகே மாதவன் ஆதரவாளா்கள் 5 பேர் கொண்ட கும்பல் காரை ஏற்றி தங்கப்பாண்டியை கொலை செய்ய முயற்சி செய்தாக கூறப்படுகிறது.