தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விருதுநகரில் உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட ரூ.2 லட்சம் பறிமுதல்! - Tamil Nadu Legislative Assembly Election

விருதுநகர் மாவட்டத்தில் இருவேறு இடங்களில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட இரண்டு லட்சத்து 31 ஆயிரத்து 200 ரூபாயைப் பறக்கும் படையினர் பறிமுதல்செய்தனர்.

உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட பணம்
உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட பணம்

By

Published : Apr 4, 2021, 7:22 AM IST

தமிழ்நாட்டில் வரும் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள, நிலையில் தமிழ்நாடு முழுவதும் வாக்காளர்களுக்குப் பரிசுப்பொருள்கள், பணம் விநியோகம் செய்யப்படுகின்றவா எனக் கண்காணிக்கப் பறக்கும் படை, நிலை கண்காணிப்புக் குழுக்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நாரணாபுரம் விலக்குப் பகுதியில் சாத்தூர் சிப்காட் தனி வட்டாட்சியர் ரவீந்தர் தலைமையிலான பறக்கும் படை குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அன்பின் நகர்ப் பகுதியில் உள்ள கல்குவாரியில் பணிபுரியும் மேலூர் பகுதியைச் சேர்ந்த வேலு என்பரின் மகன் அழகர்சாமி (33) வந்த இருசக்கர வாகனத்தைச் சோதனை செய்தபோது, அதில் உரிய ஆவணமின்றி மறைத்துவைக்கப்பட்டிருந்த ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 500 ரூபாயைப் பறிமுதல்செய்தனர். பின்னர் அப்பணம் சாத்தூரில் உள்ள அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

ராஜபாளையத்தில் பறிமுதல்செய்யப்பட்ட பணம்
அதுபோல, ராஜபாளையம் சத்திரப்பட்டி சாலையில் வந்த டெம்போ டிராவல் வேனில் சோதனை செய்தபோது மலையடிபட்டியைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் உரிய ஆவணமின்றி கொண்டுவந்த ஒரு லட்சத்து நான்காயிரத்து 700 ரூபாயைப் பறிமுதல்செய்யப்பட்டது, அது வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் கல்யாண்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details