தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெடி விபத்து ஆய்வின் எதிரொலி; பட்டாசு ஆலைகள் கால வரையற்ற மூடல்!

விருதுநகர்: சிவகாசி அருகே தொடர் வெடி விபத்தால் ஏற்பட்ட உயிரிழப்பின் காரணமாக மேற்கொள்ளப்படும் ஆய்வின் எதிரொலியாக, பட்டாசு ஆலைகள் கால வரையற்று மூடப்பட்டுள்ளன.

சிவகாசி அருகே தொடர் வெடி விபத்தால் ஏற்பட்ட உயிரிழப்பின் காரணமாக மேற்கொள்ளப்படும் ஆய்வின் எதிரொலியாக, பட்டாசு ஆலைகள் கால வரையற்று மூடப்பட்டுள்ளது.
சிவகாசி அருகே தொடர் வெடி விபத்தால் ஏற்பட்ட உயிரிழப்பின் காரணமாக மேற்கொள்ளப்படும் ஆய்வின் எதிரொலியாக, பட்டாசு ஆலைகள் கால வரையற்று மூடப்பட்டுள்ளது.

By

Published : Mar 8, 2021, 12:55 PM IST

சில தினங்களுக்கு முன்னர் சிவகாசி, சாத்தூர் ஆகிய பகுதிகளுக்கருகே ஏற்பட்ட வெடிவிபத்துகளில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் வெடி விபத்துக்களை தடுக்க மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை, வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்பு துறை ஆகியோர் அடங்கிய குழு பட்டாசு ஆலைகளில் தொடர் ஆய்வு பணியினை தீவிரப்படுத்தியுள்ளது. இதுவரை விதிமுறையை மீறியதாக கூறி 80க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

சிவகாசி அருகே பட்டாசு ஆலைகள் கால வரையற்று மூடல்

முன்னதாக உச்ச நீதிமன்றம் தடை விதித்த பேரியம் நைட்ரேட் உள்ளிட்ட ரசாயன மூலப்பொருளை பயன்படுத்தவும், சரவெடி பட்டாசுகள் தயாரிக்கவும் அனுமதி இல்லை என மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை தெரிவித்திருந்தது.

இது தொடர்பான சுற்றறிக்கை அனைத்து பட்டாசு உற்பத்தியாளர் சங்கங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அதில், கட்டுப்பாடுகளை மீறினால் ஆலைகளுக்கு சீல் வைக்கப்படும் எனவும் கூறியிருந்தது. இதன் எதிரொலியாக சிவகாசி, சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பட்டாசு உற்பத்தியாளர்கள் தாமாக முன்வந்து 90 சதவீத பட்டாசு ஆலைகளை கால வரையற்று மூடியுள்ளனர். திடீர் ஆலை மூடலால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க :'அதிமுக கூட்டணியில் 4 தொகுதிகள் கேட்டுள்ளோம்' - ஏ சி சண்முகம்

ABOUT THE AUTHOR

...view details