தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இளம்பெண் கூட்டு பாலியல் வழக்கு - போலீஸ் காவல் கோரி டிஎஸ்பி மனு - gang rape case

இளம்பெண் கூட்டு பாலியியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதாகி மதுரை மத்திய சிறையில் உள்ள 4 பேரை சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி டிஎஸ்பி வினோதினி மனு தாக்கல் செய்தார்.

இளம்பெண் கூட்டு பாலியல் வழக்கு
இளம்பெண் கூட்டு பாலியல் வழக்கு

By

Published : Mar 29, 2022, 2:28 PM IST

விருதுநகர்: மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது பட்டியலின இளம்பெண், 8 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கு கடந்த 25ஆம் தேதி சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. இவ்வழக்கில் ஹரிஹரண், ஜுனைத் அகமது, மாடசாமி, பிரவீன் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். அதனடிப்படையில் விருதுநகர் ஊரக காவல் துறை விசாரணை அதிகாரியான துணை காவல் கண்காணிப்பாளர் அர்ச்சனா வழக்குத் தொடர்பான ஆவணங்களை சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர் வினோதினியிடம் வழங்கினர்.

தமிழ்நாடு டிஜிபி வழக்கு விசாரணையை நேரடியாக கண்காணிக்க முதலமைச்சர் உத்தரவிட்டார். அதன்பின்பு வழக்கு விசாரணையின் சிறப்பு அதிகாரியாக சிபிசிஐடி கண்காணிப்பாளர் முத்தரசி நியமனம் செய்தனர். முதற்கட்டமாக வழக்கின் ஆவணங்களை ஆய்வு செய்யும் சிபிசிஐடி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முதல் 4 பேரை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளது.

மேலும், இந்த வழக்கில் சிலருக்கு தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணிடமும் கடந்த மூன்று நாள்களாக விசாரணை நடத்திய சிபிசிஐடி, குற்றம் சாட்டப்பட்ட நபர்களின் வீடுகளில் உள்ள கணினி, செல்ஃபோன்கள், மடிக்கணினி ஆகியவற்றை ஆய்வு செய்தனர். பின்னர் இன்று (மார்ச் 29) வழக்கில் கைதாகி மதுரை மத்திய சிறையில் உள்ள ஹரிஹரன், ஜூனத் அகமது, மாடசாமி, பிரவீன் உள்ளிட்ட 4 பேரை 7 நாள் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க ஸ்ரீவில்லிபுத்தூர் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி டிஸ்பி வினோதினி மனுத் தாக்கல் செய்தார்.

இதையும் படிங்க:ஐஐடி மாணவிக்கு பாலியல் தொல்லை - மேற்கு வங்கத்தில் ஒருவர் கைது

ABOUT THE AUTHOR

...view details