தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விருதுநகர் பாலியல் வழக்கு: திமுக பிரமுகர் அதிரடி சஸ்பெண்ட்

விருதுநகர் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதாகியுள்ள விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக பிரமுகர் ஜுனைத் அகமதுவை கட்சி அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

திமுக பிரமுகர் சஸ்பெண்ட்
திமுக பிரமுகர் சஸ்பெண்ட்

By

Published : Mar 22, 2022, 10:16 PM IST

Updated : Mar 22, 2022, 11:03 PM IST

சென்னை:விருதுநகரில் 22 வயது இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய புகாரில் திமுக நிர்வாகி, நான்கு பள்ளி மாணவர்கள் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

வழக்கில் தொடர்புடைய முக்கிய நபர்களான ஹரிஹரன், ஜூனைத் அகமது, மாடசாமி, பிரவீன் உள்பட 8 பேரை விருதுநகர் ஊரக காவல்துறையினர் நேற்று (மார்ச் 21) கைது செய்தனர். இதில், ஜுனைத் அகமது விருதுநகர் 10ஆவது வார்டு திமுக இளைஞர் அணி அமைப்பாளர் ஆவார்.

விருதுநகர் பாலியல் வழக்கு

இந்நிலையில், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், ஜுனைத் அகமது மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விருதுநகர் வடக்கு மாவட்டம், விருதுநகர் நகரத்தைச் சேர்ந்த ஜுனைத் அகமது கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: 8 பேர் கைது

Last Updated : Mar 22, 2022, 11:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details