அருப்புக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், திருச்சுழி சட்டப்பேரவை உறுப்பினர் தங்கம் தென்னரசு, விருதுநகர் சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.ஆர்.ஆர் சீனிவாசன், ராஜபாளையம் சட்டப்பேரவை உறுப்பினர் தங்கபாண்டியன், தென்காசி மக்களவை உறுப்பினர் தனுஷ் குமார் ஆகியோர் இணைந்து விருதுநகர் மாவட்ட ஆட்சியரை அவரது அலுவலகத்தில் சந்தித்து கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடினர்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ராமச்சந்திரன், ”விருதுநகர் மாவட்டத்தில் கரோனா பரவலைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியருடன் ஆலோசித்தாம். மேலும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக வாங்கப்பட்டுள்ள மருத்துவ உபகரணங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள் போன்றவற்றின் எண்ணிக்கை, தேவைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
கரோனா தடுப்பு நடவடிக்கைகள் - மாவட்ட ஆட்சியருடன் திமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை - விருதுநகர் மாவட்ட திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள்
விருதுநகர் : கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆலோசித்தனர்.
திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள்
கரோனா தொற்று நகர் புறங்களில் மட்டுமின்றி கிராமப் புறங்களிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனைத் தடுக்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.
கரோனா பரிசோதனை முடிவுகள் வருவதற்கு குறைந்த பட்சம் ஐந்து முதல் ஆறு நாட்கள் ஆகிறது. ஆகவே பரிசோதனை இயந்திரங்களை அதிகப்படுத்த வேண்டும். அப்போதுதான் பரிசோதனை முடிவுகளை உடனுக்குடன் அறிய முடியும். அது தொடர்பான தடுப்பு நடவடிக்கைகளையும் விரைவுபடுத்த முடியும்” எனத் தெரிவித்தார்.