தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தீபாவளி 2019 - சந்தைக்கு வந்த பசுமை பட்டாசுகள்! - பட்டாசு தொழிற்சாலை

பட்டாசு தயாரிக்க பேரியம் பயன்படுத்தக் கூடாது என்றும், சரவெடிகள் தயாரிக்கக் கூடாது என்றும், புகை, சப்தம் குறைந்த அளவுள்ள பசுமைப் பட்டாசுக்களை மட்டுமே தயாரிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு இணங்க பசுமை பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு சந்தைக்கு வந்துள்ளன.

Diwali 2019 - Green crackers arrival in the market

By

Published : Oct 20, 2019, 5:32 PM IST

‘குட்டி ஜப்பான்’ என்று அழைக்கப்படும் சிவகாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 1,070 பட்டாசு ஆலைகள் உள்ளன. நாடு முழுவதும் பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கக்கோரி 2005ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், கடந்தாண்டு அக்.23ஆம் (2018) தேதி இடைக்காலத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில், பட்டாசு தயாரிக்க 'பேரியம்' பயன்படுத்தக் கூடாது என்றும், சரவெடிகள் தயாரிக்கக் கூடாது என்றும், புகை, சப்தம் குறைந்த அளவுள்ள பசுமைப் பட்டாசுகளை மட்டுமே தயாரிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதனால், வழக்கமான முறையில் தயாரிக்கப்பட்டு வந்த பட்டாசு உற்பத்தியைத் தொடர முடியாமல் உற்பத்தியாளர்கள் தவித்தனர். மேலும், பசுமை பட்டாசு என்றால் என்ன என்பதற்கான விளக்கம் இல்லாததால் சுமார் மூன்று மாதங்களுக்கும் மேலாக பட்டாசு ஆலைகள் மூடப்பட்டன.

கடந்த மார்ச் மாதம் ‘நீரி’(NEERI) எனப்படும் தேசிய சுற்றுச்சூழல் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவன ஆய்வக நிபுணர்கள், சிவகாசியில் பசுமை பட்டாசுக்கான புதிய பார்முலாவை ஆய்வு செய்து பல கட்ட சோதனைகளுக்குப் பிறகு 'பேரியம் நைட்ரேட்' (BARIUM NITRATE) அளவைக் குறைத்து அதற்கு மாற்றாக 'ஜியோலைட்'(ZEOLITE) உள்ளிட்ட சில ரசாயனக் கலவைகளை சேர்க்கும் புதிய பார்முலாவை வழங்கினர்.

அதைக் கொண்டு கடந்த ஏப்ரல் முதல் பசுமை பட்டாசு தயாரிக்கும் பணி சிவகாசி ஆலைகளில் தொடங்கின. தற்போது தீபாவளிக்கு பசுமைப் பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளன. இது குறித்து தமிழ்நாடு பட்டாசு, கேப்வெடி உற்பத்தியாளர் கணேஷ் குமார் கூறும்போது, பசுமை பட்டாசு இந்த தீபாவளிக்கு குறைவான அளவிலேயே சந்தைக்கு வந்துள்ளது. அடுத்தாண்டு தீபாவளி முதல் பசுமை பட்டாசு முழுமையாக சந்தைப்படுத்தப்படும் என்றார்.

தீபாவளி 2019 - சந்தைக்கு வந்த பசுமை பட்டாசுகள்!

பட்டாசு கடை உரிமையாளர் சாந்தி கூறும்போது, பசுமை பட்டாசு கூடிய விரைவில் சிவகாசி முழுமையும் வந்தடையும் அந்தப் பசுமை பட்டாசு தொழிலாளர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக முழுமையான உற்பத்தி நடைபெற்றால் அனைவரும் பசுமை பட்டாசை வரவேற்போம்.

கடந்த ஆண்டும், இந்தாண்டும் பட்டாசு வெடிப்பதற்கு இரண்டு மணி நேரம் மட்டுமே ஒதுக்கியிருப்பது சற்று ஏமாற்றமாகவே இருக்கிறது. பட்டாசு வெடிப்பதற்கு சற்று கூடுதல் நேரம் வழங்க வேண்டும். அரசு இந்த தொழிலுக்கு பல்வேறு வகையான புதுமைகளை புகுத்தி வருவது வரவேற்கத்தக்கது. ஆனால் அவை தொழிலாளர்களை இணைத்து கொண்டுவர வேண்டும். அப்போது தான் அனைவரும் தீபாவளியை நல்ல முறையில் கொண்டாட முடியும் என்றார்.

இதையும் படிங்க: தீபாவளி 2019 - பட்டாசு உற்பத்தி குறைவால் எகிறிய விலை!

ABOUT THE AUTHOR

...view details