பெருந்தலைவர் காமராஜரின் 117ஆவது பிறந்தநாளை முன்னிட்டு விருதுநகரில் அவரது இல்லத்தில் உள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு அம்மாவட்ட ஆட்சியர் சிவஞானம் தனது குழந்தைகளுடன் வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஆட்சியர்! - விருதுநகர்
விருதுநகர்: மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 117ஆவது பிறந்த நாளையொட்டி விருதுநகரில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அம்மாவட்ட ஆட்சியர் சிவஞானம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பெருந்தலைவருக்கு மரியாதை செலுத்திய மாவட்ட ஆட்சியர்
இதைத் தொடர்ந்து, கல்வி வளர்ச்சி நாள் விழாவை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார். பின்னர் கதர் கொள்கையை வலியுறுத்தும் விதமாக நூல் வேள்வி நூற்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பொதுமக்கள் பெ௫ந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து, கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அவரது புகைப்படங்களையும் அவரது எளிய உடமைகளையும் பார்வையிட்டனர்.