விருதுநகர்:அமெரிக்க வாழ் தமிழர்களின் கூட்டமைப்பு சார்பாக கரோனா நோயாளிகளுக்காக 22.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான 300 படுக்கைகள் வழங்கப்படவுள்ளன. அதன் தொடக்க நிகழ்ச்சியாக 50 படுக்கைகளை சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், " தமிழ்நாடெங்கும் பரவலாக மழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகப்படியான மழை பெய்து கொண்டிருக்கிறது. அதற்குத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேட்டி மழையினால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளைக் கண்டறிந்து உடனடியாக நிவர்த்தி செய்ய அரசு அலுவலர்கள் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கிவிட்டது. பருவமழையை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.
தமிழ்நாட்டில் கரோனா பரிசோதனைக்கும் கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கும் மக்கள் நாங்கள் எதிர்பார்த்த அளவு ஒத்துழைப்பு வழங்கவில்லை. குறைந்த நாட்களில் கரோனாவைக் கட்டுப்படுத்தும் பணியை நாங்கள் செய்துவருகிறோம். கரோனா பணிக்கு தொண்டு நிறுவனங்கள் அரசுக்கு உதவியாக இருக்கவேண்டும்" என்றார்.
இதையும் படிங்க:'செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தை தமிழ்நாடு ஏற்பதே தீர்வு' - அன்புமணி