விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தரை மட்டத்தில் இருந்து 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது பிரசித்திப் பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் இந்த கோயிலுக்கு பக்தர்கள் வருகை தருகின்றனர்.
பௌர்ணமி: சதுரகிரி கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி - Devotees are allowed in Sathuragiri Temple
விருதுநகர்: பௌர்ணமியை முன்னிட்டு இன்று (அக்டோபர் 28) முதல் நான்கு நாட்கள் சதுரகிரி கோயிலுக்குச் செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
சதுரகிரி கோயிலுக்கு தினம்தோறும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி எட்டு பேர் உயிரிழந்தனர். இதையடுத்து பக்தர்களின் பாதுகாப்பு கருதி மாதம்தோறும் அமாவாசை, பௌர்ணமி உள்ளிட்ட விசேஷ தினங்களில் மட்டும் பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல வனத்துறை அனுமதி வழங்கி வருகிறது.
இந்நிலையில், பௌர்ணமியை முன்னிட்டு இன்று (அக்டோபர் 28) முதல் நான்கு நாட்களுக்கு பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இருப்பினும், கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ள அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மழை பெய்தால் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.