தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுக வேட்பாளர் பெயரை மாற்றி அறிவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்! - சாத்தூர் தொகுதி வேட்பாளருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

விருதுநகர்: சாத்தூர் தொகுதியில் அறிவிக்கப்பட்ட அதிமுக வேட்பாளரின் பெயரை நீக்கி, தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினரின் பெயரையே வேட்பாளராக அறிவிக்கக் கோரி அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலுக்கு சாத்தூர் தொகுதியில் அறிவிக்கப்பட்ட அதிமுக வேட்பாளரின் பெயரை நீக்கி, தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினரின் பெயரையே வேட்பாளராக அறிவிக்கக் கோரி அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலுக்கு சாத்தூர் தொகுதியில் அறிவிக்கப்பட்ட அதிமுக வேட்பாளரின் பெயரை நீக்கி, தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினரின் பெயரையே வேட்பாளராக அறிவிக்கக் கோரி அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

By

Published : Mar 11, 2021, 1:26 PM IST

நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில்,அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயரை அதிமுக தலைமை நேற்று (மார்ச். 10) அறிவித்தது. அதில் விருதுநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் ரவிசந்திரன், சாத்தூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

சாத்தூர் தொகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்

இந்நிலையில், இதனைக் கண்டித்தும் தற்போது சாத்தூர் சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கும் ராஜவர்மனையே வேட்பாளராக அறிவிக்கக் கோரியும் அவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராஜவர்மனை வேட்பாளராக அறிவிக்காவிட்டால் கட்சியின் உறுப்பினர் அட்டையை கட்சித் தலைமையிடம் ஒப்படைக்கப் போவதாக அவர்கள் கோஷமிட்டனர். தொடர்ந்து தகவலறிந்து வந்த வெம்பக்கோட்டை காவல் துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையை ஏற்று, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க :'வரலாற்றில் இந்தியப் பொருளாதாரத்தை மிக மோசமாகக் கையாண்ட அரசு இதுதான்'

ABOUT THE AUTHOR

...view details