விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தளவாய்புரம் ஊராட்சி மன்றத் தலைவர் முத்துசாமியைக் கண்டித்து, ஊராட்சி மன்றக் குழு உறுப்பினர்கள் ஏழு பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பேசுகையில், “ஊராட்சி மன்றத் தலைவர் நிர்வாக முறைகேடு செய்துவருகிறார். கரோனா காலங்களில் நடமாடும் காய்கறி வண்டிகள் இயங்க ரூ. 500 முதல் ஆயிரம் வரை வியாபாரிகளிடம் பணம் பெறுகிறார்.