விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையிலிருந்து பந்தல்குடிரோடு செல்லும் சாலையில் சேதுராஜபுரம் பேருந்து நிறுத்தம் அருகே தொலைபேசி கம்பிவடம் பதிப்பு பணி நீண்ட நாட்களாக நடைபெற்றுவருகின்றன. அதற்காக தோண்டப்பட்டுள்ள குழியில் தண்ணீர் தேடிவந்த மான் ஒன்று விழுந்து இறந்த நிலையில் காணப்பட்டுள்ளது.
தண்ணீர் தேடிவந்த மான் குழியில் விழுந்து மரணம் - wild animal
விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே தொலைபேசி கம்பிவடம் பதிப்பு பணிக்காக தோண்டப்பட்டிருந்த குழியில் தண்ணீர் தேடிவந்த மான் ஒன்று தவறி விழுந்து உயிரிழந்தது.
virudhunagar
அதைப் பார்த்த பொதுமக்கள் வனத் துறைக்கும், கால்நடை மருத்துவர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத் துறையினருக்கும், கால்நடை மருத்துவர்களும் இறந்த மானை மீட்டு உடற்கூறாய்வுக்காக கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதன்பின்பு வனப்பகுதியில் இறந்த மானின் உடல் அடக்கம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.