தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இன்று (மே.18) கடைவீதி, காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம் அதிகமாக இருந்தது.

இதனிடையே நகரின் பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்போது, முறையான ஆவணங்கள் இன்றி கார், இருசக்கர வாகனங்களில் வெளியே சுற்றித்திரிந்தவர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்தனர்.ஊரடங்கு கட்டுப்பாடுகளை தொடர்ந்து மீறினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனறும் அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.