தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் வெற்றிவேல். இவருக்கு விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள மதுரை - கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் சுஜா டிரேடர்ஸ் என்ற பட்டாசு குடோன் உள்ளது. நேற்று (ஆக.19) இரவு அந்த குடோனில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்து இரண்டு தீயணைப்பு வாகனத்தில் வந்த சாத்தூர், கோவில்பட்டியைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், சுமார் இரண்டு மணி நேரம் போராடி தீயை அனைத்தனர். இந்த தீ விபத்தில் சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் எரிந்து நாசமாகின. தீ விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.