விருதுநகர்:விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள தளவாய்புரம், சேத்தூர், கீழராஜகுலராமன், ராஜபாளையம் வடக்கு மற்றும் தெற்கு காவல் நிலையத்தில் பணிபுரியும் 300க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ள தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது.
அதன் அடிப்படையில், ராஜபாளையம் சேத்தூர் சேவக பாண்டியன் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் ராஜபாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 80க்கும் மேற்பட்ட காவலர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.