கரோனா வைரஸின் பெருந்தொற்று பரவல் நாளுக்கு நாள் வேகமாகப் பரவிவருகிறது. இந்தியாவில் இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100க்கும் மேல் உயர்ந்துள்ளதால், மத்திய அரசு அதனை தேசிய பேரிடராக அறிவித்துள்ளது. மேலும், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் கரோனா தடுப்புப் பணிகளுக்கு 60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன. மேலும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பு, பேருந்துகளில் கிருமிநாசினி தெளிப்பு, மருத்துவ முகாம்கள் என தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வேகப்படுத்தியுள்ளது.
கரோனா பெருந்தொற்று : கோயில் வளாகம் முழுவதும் கிருமி நாசினி அடிக்கும் நிர்வாகம்! இதன் ஒரு பகுதியாக, பல்வேறு கோயில்களில் மருத்துவச் சோதனைக்குப் பின்னரே பக்தர்கள் வழிபாடு செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். அந்த வகையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கரோனா பெருந்தொற்று தொடர்பான விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் வழங்கி, கிருமி நாசினி கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும், கோயில் வளாகம் முழுவதும் கரோனா வைரஸ் பெருந்தொற்றுத் தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி அடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. 2 நாட்களுக்கு ஒரு முறை இந்த பணி நடைபெறும் என கோயில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : 'முன்னெச்சரிக்கை எடுக்கப்பட்டதால் பேரவையை ஒத்திவைக்க அவசியமில்லை' - முதலமைச்சர்