தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பட்டாசு தொழிலை காக்க வலியுறுத்தி காங்கிரஸ் போராட்டம்! - விருதுநகர் செய்திகள்

விருதுநகர்: வட மாநிலங்களில் பட்டாசு வெடிக்க விதித்துள்ள தடையை நீக்க வலியுறுத்தி காங்கிரஸ் சார்பில் பேரணியாக சென்றபோது காவல் துறையினருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Cracker
Cracker

By

Published : Nov 6, 2020, 4:43 PM IST

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தற்போது வட மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பட்டாசு தொழிலை காக்க வலியுறுத்தி சிவகாசியில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் பழனியாண்டவர்புரம் காலனியில் இருந்து பேரணியாக சென்று காமராஜர் சிலை முன்பு உண்ணாவிரத்தில் ஈடுபட முயன்றனர்.

மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியவாறு பேரணியாக சென்றவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்த முயன்ற போது காங்கிரஸ் கட்சியினருக்கும் காவல்துறையினருக்கும் கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பின்னர், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட முயன்றபோது காவல்துறையினர் அவர்களை குண்டுகட்டாக தூக்கிச் சென்று கைதுசெய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details