விருதுநகர்: பேய்க்குளம் கிராமத்தில் இருந்து பழைய பேருந்து நிலையத்திற்கு வந்த அரசு பேருந்தை ஜெயராம் என்ற ஓட்டுநர் இயக்கி உள்ளார். அந்த பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் கல்லூரி மாணவர்கள் படியில் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து பழைய பேருந்து நிலையத்திற்கு பேருந்து வந்தவுடன் ஓட்டுநர் படியில் தொங்கிய மாணவர்களை சத்தம் போட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் ஓட்டுநர் மீது தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதைக் கண்ட அருகில் இருந்த பெரிய கருப்பன் என்ற மற்றொரு ஓட்டுநர் மாணவர்களை தடுக்க முயற்சித்துள்ளார். அப்போது அந்த மாணவர்கள் பெரிய கருப்பனையும் தாக்கியுள்ளனர்.
அரசு பேருந்து ஓட்டுநர்கள் மீது மாணவர்கள் தாக்குதல் இதில் காயமடைந்த இரண்டு ஓட்டுநர்களும் அரசு மருத்துமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். மற்ற ஓட்டுநர்கள் மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தால் மட்டுமே பேருந்துகளை இயக்குவோம் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட நான்கு மாணவர்களை காவல் துறையினர் அழைத்துச் சென்றனர். பின்னர் அரசு பேருந்து ஓட்டுநர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த சம்பவத்தால் விருதுநகர் பழைய பேருந்து நிலையத்தில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க:செல்போனில் மூழ்கிய மாணவி - பெற்றோர் கண்டித்ததால் தற்கொலை