கோவை
வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிக்கக் கூடாது, தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்தக் கூடாது, தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்யக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அனைத்து தொழிற்சங்க குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தின்போது, தொழிலாளர்கள் பிரச்னைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் உடனடியாக ஒரு தீர்வை எடுக்க வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும், ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்ட தொழிலாளிகளுக்கு 7 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
கோவையில் தொழிற்சங்கத்தினரின் போராட்டம் விருதுநகர்
அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பாக விருதுநகர் பேருந்து நிலையம், போக்குவரத்து பணிமனை போன்ற இடங்களில் பல்வேறு மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து போராட்டம் நடத்தப்பட்டது.
இந்தப்போராட்டத்தில், தொழிலாளர் நலச் சட்டங்களை நசுக்கக்கூடாது, கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவேண்டும், 100 நாள் வேலைத் திட்டத்தை 200 நாளாக உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
விருதுநகரில் தொழிற்சங்கத்தினரின் போராட்டம் நாமக்கல்
பொதுத்துறை நிறுவனங்களை தனியார் வசம் ஒப்படைக்க கூடாது, கரோனா காலத்தில் மின்கட்டணங்களை அதிகமாக வசூலிக்கக் கூடாது, அரசு வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்களில் வாங்கிய கடன், வட்டித் தொகையை திருமபச் செலுத்த டிசம்பர் வரை கால நீட்டிப்பு செய்யவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் இன்று நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல்லில் தொழிற்சங்கத்தினரின் போராட்டம் கிருஷ்ணகிரி
ரயில்வே உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களை தனியார் வசம் ஒப்படைக்க கூடாது, உடலுழைப்புச் செலுத்தும் தொழிலாளர்களுக்கான வாரியங்களை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் கிருஷ்ணகிரி சுங்கச் சாவடி அருகே இன்று ஏஐடியுசி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரியில் தொழிற்சங்கத்தினரின் போராட்டம் இதையும் படிங்க:தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று (ஜூலை 3) முதல் இரவு நேர விமான சேவை தொடக்கம்!