தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’பட்டாசு தொழிலாளர் நலன் காக்க தீக்காய சிகிச்சைப் பிரிவு அமைக்கப்படும்' - எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் எம்எல்ஏ வாக்குறுதி

விருதுநகர்: பட்டாசு தொழிலாளர் நலன் காக்க தீக்காய சிகிச்சைப் பிரிவு அமைக்க உள்ளதாக சாத்துார் தொகுதி அ.ம.மு.க.,வேட்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் எம்.எல்.ஏ., உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

பட்டாசு தொழிலாளர் நலன் காக்க தீக்காய சிகிச்சை பிரிவு
பட்டாசு தொழிலாளர் நலன் காக்க தீக்காய சிகிச்சை பிரிவு

By

Published : Mar 22, 2021, 8:57 AM IST

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.எஸ்.ஆர் ராஜவர்மன் வெம்பக்கோட்டை பகுதிகளில் அமமுகவுக்காக வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:

”பெரும்பாலான மக்கள் பட்டாசுத் தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களின் வாழ்வாதாரம் மேம்படவும், பாதுகாப்பான பட்டாசு தொழிலை மேற்கொள்ளவும் முறையான நடவடிக்கை மேற்கொள்வேன். இந்தப் பகுதிகளில் பட்டாசு ஆலைகளில் விபத்து ஏற்படும்போது அவசர சிகிச்சைக்கு என தீக்காய சிகிச்சைப் பிரிவு இல்லை.

இதனால் அதிகமான உயிர்ச்சேதம் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க வெம்பக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீக்காய சிகிச்சைப்பிரிவு ஒன்றை நிச்சயம் நான் ஏற்படுத்தி தருவேன். பட்டாசுத் தொழிலாளர்களுக்கு என முறையான அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி அவர்களின் நலம் காப்பேன்” என அவர் பேசினார்.

எம்.எஸ்.ஆர் ராஜவர்மன் எம்.எல்.ஏ.,

சுப்ரமணியபுரம், வெற்றிலையூரணி, சல்வார்பட்டி, இறவற்பட்டி, மடத்துபட்டி, விஜயகரிசல்குளம், மீனாட்சிபுரம், துரைச்சாமிபுரம், தாயில்பட்டி, வனமூர்த்திலிங்கபுரம், கோட்டையூர் உள்ளிட்ட பகுதிகளிலும் சாத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் பரப்புரை மேற்கொண்டார்.

இதையும் படிங்க:இரட்டை இலை வடிவில் சிகை அலங்காரம் செய்து வாக்கு சேகரிக்கும் அதிமுக தொண்டர்!

ABOUT THE AUTHOR

...view details