தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஆட்டோ ஓட்டுநர் போக்சோவில் கைது - girl child

விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த 3ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆட்டோ ஒட்டுனர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

vnr

By

Published : Jun 5, 2019, 12:04 AM IST

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் காமாட்சிஅம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் சசிகுமார்-கௌதமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) தம்பதி. இவர்களுடைய மகள் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். சசிகுமாரின் மகளான சிறுமி விடுமுறை காலம் என்பதால் தன் வீட்டின் அருகே விளையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

சிறுமியின் வீட்டின் அருகில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை அழைத்து தொட்டு தொட்டு பேசி சிறுமியை அனைத்து முத்தமிட்டுள்ளார். இதையே தொடர்ச்சியாக ஆட்டோ ஒட்டுநர் சில நாட்களாக செய்துள்ளார். மேலும் இதை யாரிடம் வெளியே சொல்லக் கூடாது என சிறுமியை மிரட்டியும் உள்ளார்.

அச்சிறுமி சில நாட்களாகவே தனது வீட்டில் பயந்தபடி இருந்துள்ளார். வீட்டில் அமைதியாக பயந்தபடி இருந்த சிறுமியின் நடவடிக்கையை பார்த்த தாய் அவளிடம் விசாரித்தபோது சிறுமி தனது தாயிடம் நடந்ததை முழுவதும் அழுது கொண்டே கூறியுள்ளார்.

அனைத்து மகளிர் காவல் நிலையம்

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகரின் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலை ஆய்வாளர் சுமதி சிறுமியின் வாக்குமூலத்தை கேட்டனர். பின்னர் அவர்கள் ஆட்டோ ஒட்டுநரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த விவகாரம் குறித்து காவல்துறையினர் தீவர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details