தமிழ்நாடு அரசு கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த ஜூலை மாதம் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ஞாயிற்றுக் கிழமைக கடைகள்செயல்படத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடை உத்தரவை மீறி அருப்புக்கோட்டை நகர்ப் பகுதிகளில் இறைச்சி, மீன் கடைகள் செயல்பட்டு வருவதாக நகர காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
ஊரடங்கில் செயல்பட்ட இறைச்சிக் கடைகள் இதைத்தொடர்ந்து, காவல் துறை ஆய்வாளர்கள் பாலமுருகன், வருவாய்த் துறையினர் நகரின் முக்கியப் பகுதிகளில் சோதனை நடத்தினர். அப்போது, தடையை மீறி செயல்பட்ட மீன், இறைச்சி கடைகளை மூடிய காவல்துறையினர், அதன் உரிமையாளர்கள் ஐந்து பேர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
இதையும் படிங்க:காங்.மாணவர் அணித் தலைவரின் பிரியாணி விருந்து.. 50 பேர் மீது வழக்குப் பதிவு!