விருதுநகர்: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் ஜனவரி 28 ஆம் தேதி முதல் பிப்ரவரி 4ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரை வேட்புமனுத் தாக்கல் செய்ய இறுதி நாளாக அறிவிக்கப்பட்டது.
5ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனையும், 7ஆம் தேதி வேட்புமனுவை திரும்பப்பெறுவதற்கான கடைசி தேதியாகவும் அறிவிக்கப்பட்டது. பிப்ரவரி 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும்.
அதைத்தொடர்ந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்கள் பதவியேற்பு, முதல் கூட்டம் வரும் மார்ச் 2ஆம் தேதி நடைபெறும். பின்னர் விருதுநகர் மாவட்டத்தில் மறைமுகத் தேர்தல் மூலம் சிவகாசி மாநகராட்சிக்கான மேயர், துணை மேயர், 5 நகராட்சி, 9 பேரூராட்சிகளுக்கான தலைவர், துணைத் தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் வரும் மார்ச் 4ஆம் தேதி நடைபெற உள்ளது.
வேட்பாளரின் கணவரை அறைந்த திமுக நகர பொருப்பாளர் இந்நிலையில் வேட்புமனுத் தாக்கல் 48 வார்டுகளை கொண்ட புதிதாக அறிவிக்கப்பட்ட சிவகாசி மாநகராட்சியில் போட்டியிடக்கூடிய அதிமுக, திமுக கம்யூனிஸ்ட் கட்சி, விஜய் மக்கள் இயக்கம், பாஜக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மையம் என சுமார் 322 பேர் தங்களது வேட்பு மனுக்களை மாநகராட்சியில் தாக்கல் செய்தனர். தற்போது வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று வருகிறது.
வேட்புமனு பரிசீலனைக்கு அதிமுகவினர் அதிகமாக மாநகராட்சி அலுவலகத்தில் சென்றுள்ளனர். அதனால் தங்களை அனுமதிக்க வேண்டும் என திமுகவினர், காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது நகர திமுக பொறுப்பாளர் உதயசூரியன், 20ஆவது வார்டில் போட்டியிடும் பெண் வேட்பாளரின் கணவர் கருப்பசாமியை காவல்துறையினர் முன்னர் அறைந்தார். இதனால் மாநகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
இதையும் படிங்க: பழம்பெரும் பாடகர் லதா மங்கேஷ்கர் காலமானார்