தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேர்தல் வெற்றி வேண்டுதலுக்காக ஹெலிகாப்டரில் பறந்த அதிமுக நிர்வாகி...! - Srivilliputhur Andal temple by Helicopter

விருதுநகர்: மாநிலத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டி கோவையைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி ஒருவர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு சென்று பிரார்த்தனை செய்துள்ளார்.

தேர்தல் வெற்றி வேண்டுதலுக்காக ஆண்டாளை தரிசித்த அதிமுக நிர்வாகி...!
தேர்தல் வெற்றி வேண்டுதலுக்காக ஆண்டாளை தரிசித்த அதிமுக நிர்வாகி...!

By

Published : Sep 23, 2020, 5:00 PM IST

Updated : Sep 23, 2020, 8:12 PM IST

கோயம்புத்தூரில் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் துணை செயலாளராக இருக்கும் விஷ்ணு பிரபு, அங்கு ரியல் எஸ்டேட் தொழிலதிபராக இருந்துவருகிறார்.

கோவையைச் சேர்ந்த கங்கா மருத்துவமனை நிர்வாகம் ஹெலிகாப்டர் சேவையினை சுற்றுலா மற்றும் சொந்தபயன்பாடுகளுக்கு வாடகைக்கு அளித்து வருகின்றது. சமீபத்தில் கோவையில் இந்த தனியார் ஹெலிகாப்டர் கட்டண சேவையானது தொடங்கப்பட்டது.

இந்நிலையில் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் துணை செயலாளராக இருக்கும் விஷ்ணுபிரபு, ரூ. 4 லட்சம் வாடகைக்கு ஹெலிகாப்டரில் கோவையிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு சிறப்பு அபிஷேகம் செய்ய குடும்பத்துடன் பயணம் மேற்கொண்டார்.

பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் வந்திறங்கிய அவர், வரும் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக மீண்டும் வெற்றி பெற வேண்டும் என ஆண்டாள் கோயிலில் யாகம் நடத்தி வழிபட்டார். இதில் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.இவர் சிறப்பு வழிபாடுகள் செய்து விட்டு மீண்டும் ஹெலிகாப்டரிலேயே குடும்பத்துடன் சொந்த ஊரான கோவைக்கு திரும்பினார்.

தேர்தல் வெற்றி வேண்டுதலுக்காக ஹெலிகாப்டரில் பறந்த அதிமுக நிர்வாகி

இதையும் படிங்க...மதுரை அருகே கி.பி. 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டெடுப்பு!

Last Updated : Sep 23, 2020, 8:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details