தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாத்தூர் இடைத்தேர்தல் வழக்கு: அதிமுக வேட்பாளர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு! - high court

விருதுநகர்: சாத்தூர் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கில், அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் பதிலளிக்க உத்தரவு - தேர்தல் வழக்கு

By

Published : Jul 30, 2019, 7:27 PM IST

Updated : Jul 30, 2019, 8:33 PM IST

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு கடந்த மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில் அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் 456 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதை எதிர்த்து திமுக வேட்பாளர் சீனிவாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி செய்ததால், மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகளையும், VVPAD ஒப்புகை சீட்டுகளையும் முழுமையாக எண்ணி ஒப்பிட வேண்டும். தேர்தலில் குளறுபடி செய்து வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத், தேர்தல் வழக்கு தொடர்பாக அதிமுக வேட்பாளர் ராஜவர்மன், மாநில தேர்தல் அலுவலர் ஆகியோர் ஆகஸ்ட் 30ஆம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்தார்.

Last Updated : Jul 30, 2019, 8:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details