தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விவசாய கடனுக்கு கூடுதலாக பணம் வசூல்: இந்தியன் வங்கிக்கு நஷ்டஈடு வழங்க உத்தரவு - நெடுங்குளம் விவசாயி சித்திரைக்கனியிடம் கூடுதலாக வட்டி

விவசாய கடனுக்கு 155 ரூபாய் கூடுதலாக வசூலித்த இந்தியன் வங்கிக்கு 10 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடு வழங்க ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நுகர்வோர் ஆணையம் தீர்ப்பளித்துள்ளது.

நெடுங்குளம் விவசாயி சித்திரைக்கனியிடம் கூடுதலாக வட்டி-இந்தியன் வங்கி
நெடுங்குளம் விவசாயி சித்திரைக்கனியிடம் கூடுதலாக வட்டி-இந்தியன் வங்கி

By

Published : May 17, 2022, 10:27 AM IST

விருதுநகர்:சிவகாசி நெடுங்குளம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி சித்திரைக்கனி ஆவார். அவர் ஸ்ரீவில்லிப்புத்தூர் இந்தியன் வங்கியில் விவசாய நகைக்கடன் பெற்று உள்ளார். அவரிடம் விவசாய நகைக்கடனுக்கு கூடுதலாக 155 ரூபாய் வட்டி மற்றும் மானிய சலுகை ஆகியவற்றில் சேவை குறைபாடு ஏற்பட்டது.

இதனால் அவருக்கு கூடுதலாக வட்டி, மானிய சலுகையாக மொத்தம் ரூ.2,135, மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக ரூ.5,000, வழக்கு செலவு தொகை ரூ.3,000 ஆக மொத்தம் ரூ.10,135 விவசாயிக்கு வழங்க வேண்டுமென்று ஸ்ரீவில்லிப்புத்தூர் மாவட்ட நுகர்வோர் ஆணைய நீதிபதி சேகர் உத்தரவிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details