மக்களவைத் தேர்தல், இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் அதிமுக கூட்டணிக் கட்சி சார்பாக பங்கேற்கும் முகவர்களின் ஆலோசனை கூட்டம், விருதுநகரில் இன்று நடைபெற்றது. இதற்கு அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தலைமை தாங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் ராஜேந்திர பாலாஜி பேசுகையில், "தமிழ்நாட்டில் எட்டு வழிச்சாலை, ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல் படுத்த மக்களின் கருத்துக்களை கேட்டு செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
'அதிமுகவை பற்றி பேச கருணாஸ் யார்..?' -ராஜேந்திர பாலாஜி கேள்வி
விருதுநகர்: அதிமுகவைப் பற்றி கருத்து சொல்ல கருணாஸ் அரசியல் மேதை அல்ல. அவர் அதிமுகவில் மாவட்டச் செயலாளரா... இல்ல உயர்மட்டக்குழு உறுப்பினரா? என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்களின் மனநிலைக்கு எதிராக அதிமுக அரசு செயல்படாது. அதிமுக கூட்டணிக்காக கொள்கையை விட்டுக் கொடுக்காது. தற்போது உள்ள கூட்டணி ஆழமான கூட்டணி. அதிமுகவில் தற்போது ஒரு சின்ன சிதறல் ஏற்பட்டு உள்ளது. அது உடையவில்லை. அதிமுகவைப் பற்றி கருத்து சொல்ல கருணாஸ் அரசியல் மேதை அல்ல. அவர் அதிமுகவில் மாவட்டச் செயலாளரா... இல்ல உயர்மட்டக்குழு உறுப்பினரா? அவருக்கும் அதிமுக கட்சிக்கும் தொடர்பு இல்லை. தேர்தலில் தோல்வி பயத்தில் இருப்பவர்கள், தேர்தல் ஆணையம் பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் சாதகமாக செயல்படுகிறது என்று கூறுகின்றனர்", என்றார்.