தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொள்ளாச்சி பாலியல் வழக்கை துரிதப்படுத்த வேண்டும் - ரோகிணி - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம்

விருதுநகர்: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தின் விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என நடிகை ரோகிணி வலியுறுத்தியுள்ளார்.

Actress Rohini
Actress Rohini

By

Published : Dec 12, 2019, 2:18 PM IST

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பாக, மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகை ரோகிணி, மகாகவி பாரதியாரின் கவிதைகளை பாடிய சிறுவர்களுக்கு பாரதியார் புத்தகங்கள் பரிசுப்பொருட்கள் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகை ரோகிணி, பாரதியார் பாடல்கள் டிஜிட்டல் மயமாக்குவது வரவேற்கத்தக்கது. ஹைதராபாத் என்கவுண்டர் சம்பவத்தில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும், பாதுகாக்க வேண்டியவர்களே பாதுகாக்க தவறி விட்டதாகவும் குற்றஞ்சாட்டினார். மேலும், பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Actress Rohini

தொடர்ந்து, நடிகர்கள் அரசியலுக்கு வருவது பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ரோகிணி, அரசியலுக்கு வருவதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. ரஜினி, கமல் முதலமைச்சர் வேட்பாளர்களாக களமிறங்கினால் இருவரையும் வரவேற்பேன் என்றார்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details