விருதுநகர்: கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் கே.டி.ராஜேந்திர பாலாஜி. தற்போது, அதிமுக மேற்கு மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார்.
இந்நிலையில், சாத்தூரை சேர்ந்த ரவீந்திரன் என்பவர் கொடுத்த புகாரில், தனது உறவினர் ஒருவருக்கு ஆவின் நிறுவனத்தில் கிளை மேலாளராக பணி வாங்கி கொடுப்பதாக ரூ. 30 லட்சம் பணம் வாங்கியதாக அதிமுக பிரமுகர் விஜய நல்லதம்பி, முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, மாரியப்பன் ஆகியோர் மீது மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.
மனு தள்ளுபடி
இதுதொடர்பாக, முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி உள்பட மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் அதிமுக பிரமுகரான விஜய நல்லதம்பி என்பவர் கொடுத்த புகாரில் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக ராஜேந்திர பாலாஜி தனது உதவியாளர் மூலம் ரூ. 1.06 கோடி பெற்றதாக கூறி கே.டி.ராஜேந்திர பாலாஜி, அவரது உதவியாளர்கள் அண்ணன் பலராமன், பாபுராஜ், முத்துப்பாண்டி ஆகியோர் மீது மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.
இதுதொடர்பாக புகாரில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் மீது மாவட்ட குற்றப்பிரிவு காவலர்கள் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் தன் மீது மேல் நடவடிக்கை எடுக்க தடை விதிக்கக்கோரியும் இந்த வழக்கில் முன் பிணை கோரி ராஜேந்திர பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
ஆறு தனிப்படை அமைப்பு