தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விருதுநகரில் இருதரப்பினரிடையே கடும் மோதல்: 40 பேர்  கைது!

விருதுநகர்: இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் கலவரங்கள் நடக்காமல் இருப்பதற்கு 40-க்கும் மேற்பட்டோர் காவல் துறையால் அதிரடியாகக் கைதுசெய்யப்பட்டனர்

விருதுநகரில் 40 பேர் அதிரடியாக கைது
விருதுநகரில் 40 பேர் அதிரடியாக கைது

By

Published : Jan 6, 2020, 11:23 AM IST

Updated : Jan 6, 2020, 1:12 PM IST

விருதுநகரில் பரளச்சி செங்குளத்தைச் சேர்ந்த மக்கள் கடந்த வெள்ளிக்கிழமையன்று, மதுரையில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மரியாதை செலுத்திவிட்டு வாகனங்களில் கோஷமிட்டபடி திரும்பிக்கொண்டிருந்தனர்.

அப்போது, வாகனம் பரளச்சி காவல் நிலையம் முன்பு செல்லும்போது, சிலர் கல்வீசி தாக்கினர். இதனால் அடுத்தடுத்த வாகனங்களில் வந்த செங்குளம் கிராமத்தினருக்கும் பரளச்சி கிராமத்தினருக்கும் காவல்நிலையம் முன்பே மோதல் ஏற்பட்டது.

இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அருப்புக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ், கலவரத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வேறு வழியின்றி வானத்தை நோக்கி இருமுறை துப்பாக்கியால் சுட்டார். இதில் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் சிதறி ஓடினார்கள்.

விருதுநகரில் 40 பேர் அதிரடியாகக் கைது

இதையடுத்து, இரு கிராமங்களிலும் தேடுதல் வேட்டை நடத்திய காவல் துறையின் அதிரடிப்படையினர் கலவரத்தில் ஈடுபட்ட இரு கிராமங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோரை வீடு புகுந்து அதிரடியாகக் கைதுசெய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் நடத்திய விசாரணையில், 40 பேர் கலவரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இது குறித்து காவல் துறை வழக்குப்பதிவு செய்து விருதுநகர் நீதிமன்றத்தில் நீதிபதி மருதுபாண்டி முன்னிலையில் 40 பேரை ஆஜர்படுத்தினர். அதில், 40 பேரையும் 13ஆம் தேதிவரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து மதுரை சிறைச்சாலைக்கு இருதரப்பினரையும் தனித்தனி வாகனத்தில் காவல் துறையினர் அழைத்துச் சென்றனர்.

இதையும் படிங்க: கஞ்சா விற்பவர்கள் பற்றி புகார் கொடுத்தவர் வீட்டின் மீது கல்வீச்சு

Last Updated : Jan 6, 2020, 1:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details