கரோனா தொற்று இரண்டாம் அலை பரவல் காரணமாக தமிழ்நாடு அரசு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனால் தமிழ்நாடு முழுவதும் அரசு, தனியார் மதுபானக் கடைகள் திறக்கப்படாமல் மூடப்பட்டுள்ளன.
தீவிர சோதனையில் காவல் துறையினர்:
விருதுநகர் மாவட்டம் அண்ணா நகர் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக மாவட்ட ஊரக காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், ஊரக காவல் சார்பு ஆய்வாளர் கமல் தலைமையில் காவலர்கள் அப்பகுதிக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, குணசேகரன் என்பவருக்குச் சொந்தமான பாழடைந்த வீட்டில் சாராயம் தயாரிப்பது தெரியவந்தது. இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற காவல் துறையினருக்கு, தன்ராஜ் (55), மகாலிங்கம் (45), ஆரோக்கியசாமி (41) ஆகிய மூன்று பேரும் கள்ளச்சாராய தாயாரிப்பில் ஈடுப்பட்டுகொண்டிருந்தது தெரியவந்தது.
விசாரணை:
இதையடுத்து அவர்களை கைது செய்த காவல் துறையினர், அவர்கள் தயார் செய்து வைத்திருந்த 20 லிட்டர் சாராய ஊறலை கைப்பற்றி அழித்தனர். மேலும் அவர்களிடமிருந்து இரண்டு குடம், சாராயம் தாயாரிப்பதற்கு பயன்படுத்திய பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின் மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:ஆந்திரா - திருத்தணி பகுதியில் கஞ்சா கடத்தல்