தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்ரீவில்லிபுத்தூரில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 1,500 மது பாட்டில்கள் பறிமுதல் - மதுபாட்டில்கள் பறிமுதல்

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் முறைகேடாக வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 1,500 மது பாட்டில்கள் பறிமுதல்செய்யப்பட்டன.

மதுபாட்டில்கள் பறிமுதல்
டாஸ்மாக் விடுமுறையின் எதிரொலி: பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1500 மதுபாட்டில்கள் பறிமுதல்

By

Published : Apr 5, 2021, 12:25 PM IST

தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, மூன்று நாள்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்குத் தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இதனால் கடந்த இரண்டு நாள்களாக மதுப்பிரியர்கள், கள்ளச்சந்தையில் மது பாட்டில்களை விற்பவர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை வாங்கிப் பதுக்கிவைத்து-வருகின்றனர்.

இதனால் தமிழ்நாடு முழுவதும் காவல் துறையினர் தனிப்படை அமைத்து, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களைக் கண்காணித்துவருகின்றனர். இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் கம்மாபட்டி பகுதியிலுள்ள வீட்டில், பதுக்கிவைக்கப்பட்டிருந்த 1500 குவார்ட்டர் பாட்டில்களைத் தனிப்படை காவல் துறையினர் பறிமுதல்செய்தனர்.

இதைத் தொடர்ந்து மது பாட்டில்களை முறைகேடாகப் பதுக்கிய குருசாமி, ராமர் ஆகிய இருவரை கைதுசெய்த காவல் துறையினர், மேலும் கணேசன் என்பவரைத் தேடிவருகின்றனர்.

பறிமுதல்செய்யப்பட்ட மதுபாட்டில்கள் அனைத்தும், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டும், மூட்டையாகக் கட்டிவைக்கப்பட்டும் பாதுகாக்கப்பட்டுவருகின்றன.

இதையும் படிங்க:'தமிழ்நாடு அரசு என்ன செய்யப்போகிறது?' - அற்புதம் அம்மாள் கேள்வி

ABOUT THE AUTHOR

...view details