தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேர்வில் குறைந்த மதிப்பெண் வாங்கியதால் மாணவி தற்கொலை...!

விருதுநகா்: தேர்வில் குறைந்த மதிப்பெண் வாங்கியதால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மாணவி தற்கொலை

By

Published : Apr 24, 2019, 4:39 PM IST

விருதுநகா் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள மேட்டமலையை சோ்ந்தவா் காளியப்பபிள்ளை. இவா் அதே பகுதியில் கட்டிட வேலை செய்து வருகிறார். இவரது மகள் பாண்டிச்செல்வி (19). மேட்டமலை அருகே உள்ள சின்னக்காமன்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான பன்னிரெண்டாம் வகுப்பு தோ்வு முடிவில் மிகக் குறைவான மதிப்பெண் எடுத்து பாண்டிசெல்வி தோ்ச்சி பெற்றுள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த பாண்டிசெல்வி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் சாத்தூா் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனா். சம்பவ இடத்திற்கு‌ விரைந்து வந்த காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்து பாண்டிச்செல்வியின் உடலை மீட்டு சாத்தூா் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.

பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அவர் பெற்றோரையும், அப்பகுதி மக்களையும் மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details